Monday, November 22, 2010

நான் பார்த்த அதிர்ச்சி

இரண்டாயிரத்து  ஒன்பது அக்டோபர் ஏழு ,காலை பதினோரு மணிக்கு நடந்த சம்பவம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணம் அன்று நான் எனது பயணம் மாயவரத்தை நோக்கி  திண்டிவனம் பாதையில் சென்று கொண்டு இருந்தேன் . அப்பொழுது வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்த்தேன். நான் அதுவரையில் அங்கு சென்றது கிடையாது , என்மனதில் பூங்காவை பார்க்கவேண்டும் என்று ஆசை தோன்றியது. உடனே உள்ளே செல்லலாம் என்று முடிவு செய்து அனுமதி சீட்டை பெற்று கொண்டு  உள்ளே சென்றேன் . மக்கள் கூட்டத்தில் அந்த அழகான விலங்கினத்தின் உலகத்தை பார்த்தேன் , அந்த விலங்கினத்தின் மீது இருந்த மரியாதையை கூடியது . அந்த நொடியில் சிகிச்சை அளிக்கபட்டு இருக்கும்  ஒரு குட்டி மானின் கதறல் சத்தம் கேட்டது . அப்பொழுது அது தன் தாயை தான் அழைகிறது என்பதை உணர்ந்து நானும் என் தாயை நினைத்து கொண்டு எனது பயணத்தை தொடங்கினேன் . கூடுவாஞ்சேரி எனும் ஒரு பகுதியை கடக்கும் பொழுது , நான் பார்த்த அதிர்ச்சி  ஐம்பது வயதை தாண்டிய ஒரு முதியவர் சாலை ஓரத்தில் உறங்கி கொண்டு இருபதை  பார்த்தேன், அவரது காலில் ஈ கள் கூட்டம் அவரது காலில் அடிபட்டு சீல் பிடித்து இருந்தது நான் அதிர்ச்சி ஆனேன் ஒரு மானுக்கு கிடைக்கும்
மருத்துவஉதவி மனிதனுக்கு கிடைபதில்லை என்று. நான் அவரை எழுப்பினேன் அப்பொழுது அவர் எழுந்து பார்த்து ஓடிவிட்டார் பக்கத்தில் இருந்த  ஒருவர் கூறினார் அவர் பைத்தியம் என்று. அபொழுதுதான் நான் நினைத்தேன் அவரை பைத்தியம் என்று நினைத்து நாம் எல்லாம் பைத்தியமாய் திரிகிறோம் இதுதான் சுதந்திரம் வாங்கிய இந்தியாவோ  அரசாங்கம் மானுக்கு கொடுக்கும் சலுகைகளே மனிதனுக்கு ஏன் கொடுபதில்லை என்ற விடை தெரியாத கேள்வியோடு என் பயணத்தை தொடங்கினேன்.    

3 comments:

  1. மனிதன் தன்னை காப்பற்றி கொல்வான் அஞ்சு அறிவு ஜீவன்களால் அது முடியாது அதனால் தான் சினிமாவில் கூட விலங்குகளை காமிக்க கூடாது ,,,,,இதனால் நீங்கள் மனதை போட்டு குழப்பிக வேண்டாம் ,,,,,உங்களுக்கு புரிகிறதா ,,,,,,,,டைனோசர் என்பதை அன்று மனிதன் காபற்றிருந்தால் இன்று அது அழிந்துருகாது விலங்குகளை காப்பாற்றுவது நம் கடமை ,,,,,,,,,உங்கள் அலுவலகத்தில் நீங்கள் ஒரு நாயி க்கு பிஸ்கட் போட்டீர்கள் ,,,,,,,,,,ஏன் அதை செய்திர்கள் ? ஒரு வாரத்திற்கு முன்பு நீங்கள் டீ கடையில் நிற்கும் போது ஒரு பைத்தியத்தை பார்த்து சிரிதிர்கள் செல்லம் வேற மாதுரி என்று ,,,,,,,,,,,,,,,,,,,,பிழை இருந்தால் மன்னியுங்கள் உங்களிடிம் பிழை இருந்தால் திருத்திகொளுங்கள் நன்றி ,,,,,,,,,,,,நிறைய விஷியங்கள் எழுதுங்கள் ,,,,,ப. கெளதம்

    ReplyDelete
  2. நல்ல செய்தி...(பில்லா)
    நல்ல விமர்சனம்...(கெளதம்)

    ReplyDelete
  3. நன்றி சாமி ,,,,,,,,,,அவர்களே

    ReplyDelete